ஸ்பெய்னின் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – ஐந்து இளைஞர்கள் பலி.!
வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றிலுள்ள சேமிப்பு இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து இளைஞர்கள் உயிரிழந்துள்ளதோடு நால்வர் இலேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பார்சிலோனாவிற்கு வடக்கே சுமார் 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மான்லியூ என்ற சிறிய நகரத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 9:00 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்திலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த குடியிருப்பின் சேமிப்பு இடத்தில் தீ விபத்து ஏற்பட்டமை குறித்து குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாக கேட்டலோனியாவின் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. அவர்களில் யாரும் கட்டடத்தில் வசிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் இறந்துள்ளவர்களி்ல் சிறுவர்களும் உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.