உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரஷ்ய துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
55 பார்வைகள்

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகங்களில் ஒன்றின் மீது உக்ரைன் நேற்று முன்தினம் ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியுள்ளது.ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ள சூழலில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிராஸ்நோடர் பிராந்தியத்தில் உள்ள தமன் துறைமுகத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதலில் இருவா் பலத்த காயங்களுககு உள்ளாகியுள்ளனர்.இதேவேளை உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் எரிசக்தி, குடிநீா் விநியோகம் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புகள் என்பன பெரிதும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் விளைவாக ஒடேசா பிராந்தியத்தில் மின் விநியோகம் முழுவதுமாக தடைபட்டுள்ளது.இதேநேரம் ஜொ்மனியின் மியூனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது.

ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல், உக்ரைனை மட்டும் குறிவைப்பது சரியான முறையல்ல. இப்பிரச்சினையில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள், எதிர்வரும் காலங்களில் முக்கியப் பங்காற்ற வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0