உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொருளாதார மீட்சிக்கு பிரிட்டன் முழு ஆதரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கைக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் தற்போதைய நிலையில் விஜயம் மேற்கொண்டமைக்காகப் பிரிட்டன் துணைப் பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போது பிரிட்டன் வழங்கிய ஒத்துழைப்புகளைப் பாராட்டினார்.

குறிப்பாக, இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்காக விதிக்கப்பட்டிருந்த வரிச்சலுகைகளை நீக்கி, பிரிட்டன் வழங்கிய விசேட ஆதரவுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கை தற்போது எட்டியுள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்து பிரிட்டன் துணைப் பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டார். குறிப்பாக, வரி அறவீட்டுச் செயற்பாடுகள் உள்ளிட்ட புதிய பொருளாதாரத் திட்டங்களை அவர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.

பசுமை வலுசக்தி துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசு ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாக டேவிட் லம்மி உறுதியளித்தார்.

சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் வேதனையான அனுபவங்கள் குறித்து பிரிட்டன் துணைப் பிரதமர் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். இந்தச் சவால்களை முறியடித்து இலங்கை மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0