உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாகாண சபைத் தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கின்றார்கள்.

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாகாண சபைத் தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கின்றார்கள். இது அவர்களது முரண்பாடான செயற்பாடாகவே இருக்கின்றது. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரபாகரனை பின்பற்றுவார்களாயின் மாகாண சபைத் தேர்தல் வேண்டாம் என்றே கூற வேண்டும். சிங்கள அரசாங்கத்தின் தேர்தல் முறையினை ஏற்றுக்கொள்கின்றார்கள். அரசாங்கத்திற்கு சில அழுத்தங்களை வேண்டும் என கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றார்கள் என்பது தான் உண்மையாகும். எனவே தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் ஊட‌க‌ பேச்சாள‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்தார்.

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் 12வ‌து பேராள‌ர் மாநாடு இன்று சாய்ந்த‌ம‌ருது க‌லாச்சார‌ ம‌ண்ட‌ப‌த்தில் ந‌டைபெற்ற‌ போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவ‌ர் தெரிவித்திருப்ப‌தாவ‌து,
மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடக்கும் என்பது அதிசயமாகும். கடந்த காலங்களில் மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடாத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் இவ்வருடமும் மாகாண சபைத் தேர்தல் என்பது அமைச்சர் ஒருவரின் கூற்றினால் நடப்பது சந்தேகமாகவுள்ளது. 2017 ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடைபெறக் கூடாது என்பது தொடர்பில் சதி செய்யப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் சுமந்திரன் தரப்பினர் ரணில் தலைமையில் ஒன்றிணைந்து மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கான சட்டத்தை கொண்டு வந்தார்கள் என்பதும் சகலரும் அறிந்த உண்மை.

அதன் பிரதி பலனை தான் இந்நாடு தற்போது அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது. அப்போது சிலர் மாகாண சபையை ஒழிப்பதற்கான சதி என்று கூறினார்கள். தற்போது கூட அம் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்குரிய சட்டப்பிரச்சினை இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாகவே உணர்கின்றோம். மாகாண திருத்த சட்டத்தை இரவோடு இரவாக கொண்டு வந்த ரணிலும் சுமந்திரனும் ஹக்கீமும் றிசாட்டும் தான் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் பகிரங்கமாகவே சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அண்மையில் கூட நிசாம் காரியப்பரும் மாகாண சபையை ஒழிப்பதற்கு எமது கட்சியும் ஒரு காரணம் தான் என ஏற்றுக்கொண்டிருந்தார்.

இவ்வாறெல்லாம் பார்க்கின்றபோது வேண்டுமென்றே இத்தேர்தலை நடாத்த விடவில்லை என்பது எண்ணத் தோன்றுகின்றது. இதை விட சுமந்திரன், ஹக்கீம், காரியப்பர் போன்றோர்கள் சட்டத்தரணிகள் ஆவர். இவர்களுக்கு கூட இந்த சட்டங்கள் தெரியவில்லையா என்பதை நாங்கள் கேள்வியாக கேட்க விரும்புகின்றோம். எங்களை பொறுத்தவரை மாகாண சபைத் தேர்தல் சரியான முறைப்படி நடத்தப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தான் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

ஆனால் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என இன்று ஒப்பாரி வைக்கின்றது. இது அவர்களது முரண்பாடான செயற்பாடாகவே இருக்கின்றது. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரபாகரனை பின்பற்றுவார்களாயின் மாகாண சபைத் தேர்தல் வேண்டாம் என்றே கூற வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாகாண சபைத் தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கின்றார்கள்.

சிங்கள அரசாங்கத்தின் தேர்தல் முறையினை ஏற்றுக்கொள்கின்றார்கள். அரசாங்கத்திற்கு சில அழுத்தங்களை வேண்டும் என கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றார்கள் என்பது தான் உண்மையாகும். எனவே தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் 12வ‌து பேராள‌ர் மாநாடு க‌ட்சியின் த‌லைவ‌ர் முஸ்ன‌த் முபாற‌க் த‌லைமையில் ந‌டை பெற்ற‌ இம்மாநாட்டில் க‌ட்சியின் நிர்வாக‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ள் உட்ப‌ட‌ ப‌ல‌ரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

க‌ட்சியின் செய‌லாள‌ர் இர்பான் முஹிதீன் சிற‌ப்புரையாற்றினார். ஸ்ரீல‌ங்கா ஐக்கிய காங்கிர‌சின் ஏற்பாட்டில் ந‌டைபெற்ற‌ பெண்க‌ளுக்கான‌ அர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌ ப‌யிற்சிப்ப‌ட்ட‌றையில் க‌ல‌ந்து கொண்டோர்க‌ளுக்கான‌ சான்றித‌ழ்க‌ளும் இம்மாநாட்டின் போது வ‌ழ‌ங்கி வைக்க‌ப்ப‌ட்ட‌மை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0