உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் திருத்தங்களைக் கோரும் ஐ.நா. நிபுணர்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

அரசால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு’ சர்வதேச சட்டங்களுக்கு முழுமையாக இணங்கவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் எழுவர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கூட்டாகக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் கோரியிருந்தார்.

கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-
சட்டத்தை மீளாய்வு செய்வதற்கும், பொதுமக்களின் கருத்தை அறிய முற்பட்டதற்கும் அரசின் அர்ப்பணிப்பை நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த புதிய சட்ட வரைவின் 3 ஆம் பிரிவில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் மிகவும் விரிவாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இத்தகைய தெளிவற்ற வரைவிலக்கணங்கள் மனித உரிமைப் பாதுகாவலர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சட்ட வரைவின் சில சரத்துக்கள், சர்வதேச சமவாயச் சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு முரணாக அமைந்துள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுமீறிய அதிகாரங்கள் குறித்து அவர்கள் தமது தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் புதிய சட்ட வரைவு எவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுடன் ஒத்துப்போகின்றது என்பது குறித்தும், கருத்துப் பகிர்வு செயல்முறை எந்தளவுக்கு வெளிப்படையானது என்பது குறித்தும் தமக்கு விளக்கமளிக்குமாறு ஜனாதிபதியிடம் ஐ.நா. நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் பென் சோல் உட்பட ஏழு விசேட நிபுணர்கள் இந்தக் கடிதத்தில் கூட்டாகக் கையெழுத்திட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0