உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இடமாற்றம் மற்றும் நிர்வாக கொடுப்பனவுகளில் உள்ள மட்டுப்பாடுகளால் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் பதிலுக்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகள் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் 17.02.2026 இன்று நாடாளுமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்கு இன்னும் இரண்டு வார கால அவகாசத்தை வழங்குமாறு சபாநாயகரிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய கோரியுள்ளார்.

குறித்த மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 22.08.2025 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

இந்நிலையில் கடந்த 02.12.2025 அன்று நாடாளுமன்ற சபை அமர்வில் குறித்த கேள்விக்கான பதில் வழங்கப்படுமென நாடாளுமன்ற அறிவித்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் அப்போது “டித்வா” அனர்த்தத்தினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் குறித்த தினத்தில் இந்தக் கேள்விக்கான பதில்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இத்தகைய சூழலில் குறித்த கேள்விகள் 17.02.2026 இன்று நாடாளுமன்ற சபை அமர்வில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தக் கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்கு இன்னும் இரண்டுவாரம் கால அவகாசத்தைக் கோரியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் துறைசார்ந்த அமைச்சர்களிடம் கேட்பதற்கென 30 கேள்விப்பத்திரங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் சமர்ப்பிக்கப்பட்டு துறைசார் அமைச்சர்களால் நாடாளுமன்றில் பதில் வழங்குவதற்காக இதுவரை ஏழு கேள்விப்பத்திரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் ஐந்து கேள்விப் பத்திரங்களுக்கான பதில்கள் துறைசார் அமைச்சர்களால் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் மிகை ஊழியர் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிபர்கள் எதிர்நோக்கும் சிக்கல் தொடர்பான இந்தக் கேள்விக்கு பதில் வழங்குவதற்கு தற்போது இரண்டு வாரகால அவகாசம் கோரப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே பகுதியளவில் கட்டப்பட்டு கட்டி முடிக்கப்படாத பாடசாலைக் கட்டடங்கள் தொடர்பான கேள்வியும் இதேபோல் இரண்டு முறை எடுக்கப்பட்டு இவ்வாறு இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளதோடு, மூன்றாவதும் இறுதியுமான முறையாக அடுத்த சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0