உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது துணைவியார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.


இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவத்தை முன்னிறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:“சட்டத்தரணி மற்றும் அவரது துணைவியார் படுகொலை செய்யப்பட்டமை, நாட்டின் சட்ட ஆட்சி மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.


தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்ற சூழலில், இப்பாதகச் சம்பவம் தொடர்பில் நியாயமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கில்லை.


நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்களை கட்டுப்படுத்தத் தவறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அதற்குப் பொறுப்பேற்று உடனடியாகத் தனது பதவியை விலக்கிக் கொள்ள வேண்டும்.மேலும், நாட்டிலுள்ள சட்டத்தரணிகளின் பாதுகாப்பை அரசு துரிதமாக உறுதிப்படுத்த வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

61 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0