உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக, நீர்கொழும்பு களப்புப் பகுதியை அபிவிருத்தி செய்யும் புதிய திட்டமொன்று நாளை (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புதிய படகு இறங்குதுறை மற்றும் படகு செலுத்தும் தளம் என்பன அமைக்கப்படவுள்ளன.கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த அபிவிருத்தித் திட்டமானது நீர்கொழும்பு களப்பினை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்களின் வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவீன தரத்திலான இறங்குதுறை அமைக்கப்படுவதன் மூலம், படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கும், களப்புப் பகுதியின் அழகினைப் பேணுவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் அப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

61 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

89 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0