உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாளை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத சந்தர்ப்பத்திலோ அல்லது ஏதேனும் காரணத்தினால் பரீட்சைக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டாலோ, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்புகொள்வதற்காக நேரடித் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதற்கமைய, 117 அல்லது 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மேலதிகமாக மேலும் 4 புதிய இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி, 011 366 8020 , 011 366 8100 , 011 366 8013 மற்றும் 011 366 8010 எனும் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, பரீட்சை ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னிருந்து, பரீட்சை முடிந்து இரண்டு நாட்கள் வரை, அதாவது வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் வரை பாதுகாப்புப் பிரிவினர், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

89 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0