உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களது பங்கேற்புடன் பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 16.02.2026 இன்று நடைபெற்றது.

இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.

மேலும் கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் காணி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, குடிநீர், வனப்பாதுகாப்பு, யானை – மனித மோதல், சிறு நீர்ப்பாசனக் குளங்கள் அபிவிருத்தி மற்றும் பிரஜா சக்தி போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.

இதன் போது காரமுனை பகுதியில் இடம்பெறும் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களால் முக்கிய விடயமாக வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இக் கூட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

89 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0