உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையவில்லை என இராணுவத்தின் முன்னாள் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பு நிலைமைகளைப் புரிந்துகொண்டு அவற்றைச் சிறப்பாக நிர்வகிக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது:“தேசிய பாதுகாப்பிற்கு தற்போது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை. கடந்த காலங்களில் சில குழுக்கள் அமைதியின்மையை ஏற்படுத்தவும், இனவாதப் பதற்றங்களைத் தூண்டவும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. சில தரப்பினர் தமக்கென ஒரு அரசியல் பிம்பத்தை உருவாக்கும் நோக்கில் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.


ஆயுதப்படைகள் தங்களது கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றி வருகின்றன. ஒன்று அல்லது இரண்டு தனிநபர்கள் தொடர்புடைய தனித்த சம்பவங்களை முன்னிறுத்தி மக்கள் பீதியடையத் தேவையில்லை. அவை தேசிய பாதுகாப்பை பாதிக்கும் அளவிற்கு இல்லை.கொழும்பு போன்ற நகரங்களில் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், மோட்டார் சைக்கிள்களில் வந்து நடத்தப்படும் திடீர் தாக்குதல்களை முழுமையாகத் தடுப்பது சவாலானது. எனினும், இத்தகைய குற்றச்செயல்களை கட்டுப்படுத்த உரிய மற்றும் துல்லியமான புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

89 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0