உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அரசின் புதிய சட்டமூலம் அடக்குமுறையின் உச்சம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அரசு முன்வைக்க முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஜனநாயக அடிப்படைகளையே பாதிக்கும் அபாயம் கொண்டது எனக் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் கடுமையாக எச்சரித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் எட்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் எந்தச் சட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

புதிய சட்டம் நாட்டில் ஜனநாயக உரிமைகள் குறையும் சூழலை உருவாக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சட்டம் கொண்டுவரப்படுமாயின் அது அரசியல் கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்கும், குடிமக்களின் உரிமைகளுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டம் தொடர்பாக மக்கள் கருத்து கேட்காமல் அவசரமாக முடிவெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், விரிவான பொதுக் கலந்துரையாடல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஏலவே கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு எத்தகைய பாரிய சவால்களை ஏற்படுத்தியது என்பதை நாம் மறக்க முடியாது. அப்படி இருக்கையில் புதிய சட்டம் மோசமாக இருக்கின்றது. மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் ஒன்றுபட்ட நிலைப்பாடு அவசியம்.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளமை சமுதாயத்தின் சகல மட்டங்களிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

89 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0