கேரளாவில் பத்து மாத பெண் குழந்தை உடலுறுப்பு தானம்; ஐந்து பேருக்கு மறுவாழ்வு.!
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம், மலப்பள்ளி பகுதியில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற பெண் குழந்தையின் உடலுறுப்புகள் பெற்றோரின் ஒப்புதலுடன் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, திருவனந்தபுரம் சித்திரை திருநாள் மருத்துவமனை, கிம்ஸ் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நான்கு பேருக்கு பொருத்தப்பட்டன.
கண்கள் கண் வங்கிக்கு தானமாகக் கொடுக்கப்பட்டன.மறுவாழ்வு பெற்ற நான்கு பேரின் குடும்பத்தினர் குழந்தையின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மூலம், 10 மாத வயதில் அலின் ஷெரின் ஆபிரகாம் கேரளாவின் இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவராக மாறியுள்ளார்.