வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகும் வாய்ப்பு.!
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்படி, வங்கக் கடலில் இரண்டு நாள்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனைச் சேர்ந்த இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 18ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.19 மற்றும் 20ஆம் திகதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதோடு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.