உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அனைத்து சட்டத்தரணிகளும் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, இன்று திங்கட்கிழமை (16) நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகியிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற சட்டமா அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து சட்டமா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நீதிமன்றங்களுக்குச் செல்லும் சட்ட அதிகாரிகள், ஏனைய சட்டத்தரணிகளினால் கோரப்படும் வழக்கு ஒத்திவைப்புகளுக்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்க மாட்டார்கள் என சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0