உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்; ஐவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுணாகொட்டுவ – கலுகமுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் கொஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது.

கலுகமுவ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்து வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மாங்குளம் – ஏ09 வீதியில் ஜேர்மன் டெக் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 57 மற்றும் 62 வயதுடையவர்கள் எனவும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

வவுனியா நோக்கிச் சென்ற கார், அதே திசையில் சென்ற உந்துருளியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் உந்துருளி ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய கண்டி வீதியில் சியம்பலாப்பே சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெலிமடை – மீராவத்தை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பண்டாரவத்தை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று பெற்றோல் நிரப்பு நிலையம் நோக்கித் திரும்பும்போது, எதிர்திசையில் வந்த உந்துருளியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், கந்தகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பதுளை – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

பதுளை நோக்கி சென்ற லொரி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கந்தகெட்டிய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0