உந்துருளியுடன் கார் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு.!
முல்லைத்தீவு – முறிகண்டி ஏ-09 வீதியில் இன்று(15) உந்துருளியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த 60 வயதான செல்லையா விஜேந்திரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி ஏ-09 வீதியில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்று முன்னே சென்ற உந்துருளி ஒன்றுடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது, படுகாயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.