உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பிரிவினைவாதக் கோரிக்கைகளை தடுக்க மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துக.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட ‘கரிநாள்’ போராட்டங்கள், நாட்டில் மீண்டும் பிரிவினைவாதக் கோரிக்கைகள் தலைதூக்குவதற்கான அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக எச்சரித்துள்ளார்.

கிளிநொச்சி, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இப்போராட்டங்களில் ‘வெளியக சுயநிர்ணய உரிமை’ கோரும் பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தமை ஒரு தீவிரமான அரசியல் சமிக்ஞை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் காணப்படும் இத்தகைய தீவிரமான அரசியல் நிலைப்பாடு, நாடு மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போக்கினை நோக்கி நகர்வதைக் காண்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதே சிறந்த தீர்வாகும் என்றும் அவர் முன்மொழிந்துள்ளார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டும் பிரிவினைவாதக் கோரிக்கைகளுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, முடங்கிக் கிடக்கும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” – என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக ரீதியான அதிகாரப் பகிர்வு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதன் மூலமே இத்தகைய தீவிரமான கோரிக்கைகளைத் தணிக்க முடியும் என்றும், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரள வேண்டும் என்றும் கலாநிதி தயான் ஜயதிலக கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0