உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாட்டைச் சூறையாடியவர்களுக்கு எம் தூய்மையான வேலைத்திட்டம் சிறுபிள்ளைத்தனமாகவே தெரியும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இந்த நாட்டைச் சூறையாடிய மொட்டுக் கட்சியினருக்கு எமது தூய்மையான வேலைத்திட்டம் சிறுபிள்ளைத்தனமாகவே தெரியும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அநுர அரசின் அமைச்சர்கள் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்த விமர்சனத்துக்குப் பதில் வழங்கும்போதே அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“கடந்த காலங்களில் நாட்டைப் பொருளாதார ரீதியாகப் படுகுழியில் தள்ளியவர்களுக்கும், ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரத்தில் ஊறியவர்களுக்கும் எமது புதிய மற்றும் வெளிப்படையான வேலைத்திட்டங்கள் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிவதில் வியப்பில்லை. நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் மக்களின் நலனை நோக்கியதே தவிர, தனிநபர் இலாபங்களுக்காக அல்ல.

தற்போதைய அமைச்சர்கள் எவ்வித வரப்பிரசாதங்களையும் எதிர்பாராது, நாட்டின் கைத்தொழில் மற்றும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப இரவு பகலாக உழைத்து வருகின்றனர். பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் குறை கூறுவதை விடுத்து, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினால் நாடு முன்னேறும்.

மொட்டுக் கட்சியினர் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நோக்குடன் இவ்வாறான முதிர்ச்சியற்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறுகின்றமையை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள். ஏனெனில் நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்லர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0