உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அநுர அரசின் சரிவுக்கு அமைச்சர்களின் சிறுபிள்ளைத்தனமே பிரதான காரணம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்பட்டு வருகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அநுர அரசின் சரிவு ஆரம்பித்துவிட்டது. இதற்கு அமைச்சர்களின் செயற்றிறன் இன்மையே பிரதான காரணமாகும். அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் பொறுப்புடன் செயற்படாமல், சிறுபிள்ளைத்தனமான போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

நாட்டின் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் இடங்களில் இருப்பவர்கள் இவ்வாறான முதிர்ச்சியற்ற தன்மையுடன் செயற்படுவது நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

அரசின் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பலவீனங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமைக்கு இந்த அமைச்சர்களின் அனுபவமின்மையே காரணம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0