உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பழைய திருடர்களை பாதுகாக்கும் அரசியல் கலாச்சாரம் இனி இலங்கையில் செல்லுபடியாகாது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

‘அரகலய’ போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருக்கின்றது என்று நாமல் ராஜபக்ஷ எம்.பி. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், தோல்வியுற்ற அரசியல்வாதிகளின் விரக்தியையே காட்டுகின்றன என்று தேசிய மக்கள் சக்தி அரசு பதிலடி கொடுத்துள்ளது.

நாமல் ராஜபக்ஷவின் கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது,

“அரகலய என்பது வெளிநாட்டு நிதியில் இயங்கியது அல்ல; அது ராஜபக்ஷக்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் பட்டினியால் வாடியபோது வெடித்த தன்னிச்சையான மக்கள் எழுச்சியாகும். எரிபொருள் வரிசைகளிலும், மின்சாரத் தடையிலும் மக்கள் அவதிப்பட்டபோது இந்த ‘தேசப்பற்று’ எங்கே போனது? மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதனை வெளிநாட்டுச் சதி என்று கூறுவது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்த விசாரணைகளை எமது அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திருடப்பட்ட தேசிய சொத்துக்களை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்கும், மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குமே நாமல் ராஜபக்ஷ இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறி வருகின்றார்.

கடந்த ‘அரகலய’ போராட்டத்தின் போது அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள் மீது குண்டர் தாக்குதல்களை ஏவிவிட்டது யார் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். அன்று அதிகாரத்தைப் பயன்படுத்தி இளைஞர்களை ஒடுக்கியவர்கள், இன்று அவர்கள் மீது ஆணைக்குழு அமைப்பதாகக் கூறுவது வேடிக்கையானது. 1988/89 காலப்பகுதியைப் பற்றிப் பேசும் நாமல், கடந்த காலங்களில் இளைஞர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அரச வன்முறைகளை முதலில் திரும்பிப் பார்க்க வேண்டும்.

நாம் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அல்லது அடக்குமுறைக்கும் அஞ்சப்போவதில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றித் தொடரும்.

பழைய திருடர்களைப் பாதுகாக்கும் அரசியல் கலாச்சாரம் இனி இலங்கையில் செல்லுபடியாகாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0