மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அன்னபூரணி கலாசார மண்டபம் திறந்து வைப்பு.!
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மண்டபத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இதில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் அன்னபூரணி மண்டப நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி சிறப்பாக மற்றும் அமைதியாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




