உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வவுனியாவில் 600 அரச வீடுகள் பூட்டப்பட்ட நிலையில் – உபாலி சமரசிங்க தகவல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வவுனியா மாவட்டத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் சுமார் 600 வீடுகள் தற்போது பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதனை அவர் குறிப்பிட்டார்.


தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வவுனியா மாவட்டத்தில் 3349 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் 2554 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.வவுனியாவில் மேலும் பல வீடுகள் இறுதி கட்ட பணிகளில் உள்ளதாகவும், அவை பூர்த்தி செய்யப்பட்டால் 900 வீடுகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.


இதற்கு பதிலளித்த உபாலி சமரசிங்க, கடந்த காலத்தில் சில குடும்பங்களுக்கு இரண்டு அல்லது மூன்று வீடுகள் வழங்கப்பட்டு, அவை பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மடுகந்த, குடாகச்சகொடி, ஈரப்பெரியகுளம், கலாபோகஸ்வேவ உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான வீடுகள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கிய வீடுகளில் உண்மையில் வீடு இல்லாதவர்களின் வீடுகளை பூர்த்தி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயன்படுத்தப்படாமல் உள்ள வீடுகளை மீளப் பெற்று வீடு இல்லாத மக்களுக்கு வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட மற்றும் வீடு இல்லாத மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0