அடுத்த 36 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு.!
அடுத்த 36 மணிநேரத்தில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில பகுதிகளில் 50 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகும் சாத்தியம் காணப்படுகிறது.
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மூடுபனி நிலவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்