மன்னார் கடல் பகுதியில் போதைப்பொருள் மீட்பு.!
மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றை கடற்படையினர் இன்று கையகப்படுத்தினர்.அந்த படகில் இருந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த டிங்கி படகிலிருந்து போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டிருந்தன.
“முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான சோதனையின் அடிப்படையில் இந்த பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றன.
பறிமுதல் செய்யப்பட்ட ஹஷிஷ் அளவு 50 கிலோகிராமை விட அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் ஹஷிஷ் போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.