தியகல பகுதியில் ஒரு சிறுத்தை குட்டி உயிருடன் மீட்பு!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் இன்று வாகனத்தில் மோதி நடக்க முடியாமல் தவித்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டது.வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையால், சம்பவ இடத்தில் உள்ள சிறுத்தை குட்டியை பாதுகாப்பாக மீட்டு, சிகிச்சைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
வட்டவளை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் சந்தன கமகே சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார். நல்லதண்ணி வன ஜீவராசிகள் சம்பவத்தை கண்காணித்து, சிறுத்தை குட்டியை மீட்பதில் முக்கிய பங்கு பெற்றனர்.