நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை.!
நுவரெலியா சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (14) காலை முதல் கடுமையான மழை மற்றும் பனிமூட்டம் நிலவி காணப்படுகின்றது. கந்தபளை, நானுஓயா, லிந்துலை போன்ற இடங்களில் மழை மற்றும் பனிமூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பொலிஸார் சாரதிகளுக்கு வாகன செலுத்தும்போது முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டு முன்னெச்சரிக்கையுடன் ஓட்டுவதற்கும், நுவரெலியா – பதுளை, நுவரெலியா – ஹட்டன் மற்றும் நுவரெலியா – கண்டி பிரதான வீதிகளில் அதிக போக்குவரத்து காரணமாக கவனமாக நடப்பதற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியா வரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை பயன்படுத்தாமல் வாகனங்களை இயக்க முடியாமல் இருப்பதால், இந்த பிரச்சினை போக்குவரத்து சீர்திருத்தத்தை மேலும் பாதிக்கக்கூடும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.கடுமையான மழை மற்றும் குளிர் தாக்கம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.