உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பில் சுற்றறிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பில் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கி புதிய திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட 2023 மார்ச் 03 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு மேலதிகமாக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரு வருட காலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்படும் விஷ வகைகள், அபின் மற்றும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை “இணைப்பு – ஆ” இல் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்திற்கு ஏற்ப தயாரித்து, ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் டிசம்பர் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையிடம் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு நீதிச் சேவை ஆணைக்குழுவின் கட்டளைக்கு இணங்க அமுல்படுத்தப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0