உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட புறாக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் – நெடுந்தீவில் மனிதாபிமானமற்ற செயல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள், நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் வருவதை அறிந்த உரிமையாளர்களால் உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இரண்டு நாட்களுக்கு முன்னர் 144 புறாக்கள் நெடுந்தீவுக்குக் கடத்தி வரப்பட்டதாகவும், அவற்றை பகுதிகளாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக 44 புறாக்களை குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது கடற்படையினர் அவற்றை வழிமறித்து மூவரைக் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.மேற்கொண்ட விசாரணையில், மீதமிருந்த புறாக்கள் நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது. அவற்றை மீட்கப் பொலிஸார் வருவதை அறிந்த வீட்டு உரிமையாளர்கள், சட்ட நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் புறாக்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.


சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், 50 இற்கும் மேற்பட்ட புறாக்கள் தீயில் கருகி உயிரிழந்ததையும், பல புறாக்கள் கடுமையாகக் காயமடைந்திருந்ததையும் கண்டுள்ளனர். உடனடியாகக் கூண்டைத் திறந்ததன் மூலம் சில புறாக்கள் பறந்து சென்று உயிர் தப்பியுள்ளன.இந்த மனிதாபிமானமற்ற செயல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தப்பியோடிய சந்தேகநபர்களைத் தேடும் பணியும் நடைபெற்று வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0