உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கூட்டாட்சித் தீர்வு விவாதம்: தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பை நிராகரித்த தமிழரசு – கஜேந்திரகுமாருக்கு சிவஞானம் பதில்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள ‘ஏக்கிய இராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசமைப்பு வரைவினை நிராகரித்து, கூட்டாட்சி (சமஷ்டி) தீர்வை வலியுறுத்தி தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைய விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி நிராகரித்துள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவை ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபம் வளாகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சிக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ் மக்கள் தேர்தல்கள் தோறும் சமஷ்டி தீர்விற்கே ஆணை வழங்கி வருவதாகவும், 2015–2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசமைப்பு வரைவினை தற்போதைய அரசு நிறைவேற்ற முனைவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


மேலும், தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி தீர்வை முன்னிறுத்த தமிழ்த் தரப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.இதற்கு பதிலளித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஒற்றையாட்சி வரைவு தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக குறித்த கூட்டத்தில் பங்கேற்பது சாத்தியமற்றது எனத் தெரிவித்தார்.


அதேசமயம், ஒற்றையாட்சி முறையை முழுமையாக எதிர்ப்பதிலும், சமஷ்டி முறையை வலியுறுத்துவதிலும் தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசு புதிய அரசமைப்பை நோக்கி நகரும் இந்நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் கொள்கை ரீதியாக ஒன்றிணைவதில் மீண்டும் சிக்கல்கள் எழுந்துள்ளன என்பது இந்தச் சம்பவம் மூலம் வெளிப்படுகிறது.
எனினும், நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0