நான்கு இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை.!
2026 ஆம் ஆண்டின் இதுவரையுள்ள காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.ஜனவரி 1 முதல் பெப்ரவரி 12 வரை, 401,787 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அந்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை பெற்ற நாள் பெப்ரவரி 12 ஆம் திகதி. அன்றைய தினம் 12,731 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.மேலும், பெப்ரவரி மாதத்தின் முதல் 12 நாட்களில் மாத்திரம் 124,460 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது