உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டவிரோத மீன்பிடியினை தடை செய்யக் கோரி போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சட்டவிரோத தொழில் அதிகரிப்பு சிறுதொழில் மீனவர்கள் வாழ்வு பாதிப்பு, சட்டவிரோத தொழிலை தடைசெய், சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக அனுர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்வாங்காதே என பல கோசங்களுடன் நடைபவனியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு வருகைதந்து போராட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரரினை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர் .

தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 20 வீதமானவர்கள் மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ளதாகவும், சுமார் 71 km க்கும் அதிகமாக கடல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் மீன் வளம் சட்டவிரோத முறையில் அழிக்கப்படுவதாகவும், தற்போதய அரசாங்கத்தின் கொள்கையாக இயன்றவரை சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதாகும் என தெரிவித்துடன், எமது மாவட்டத்தில் மீன்பிடி துறை பிரச்சனையிலும் பார்க்க அதிகமாக இருந்த போதைப்பொருள் பிரச்சனை தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போராட்டகாரர்களின் கோரிக்கையினை தாம் அரசாங்கத்திற்கு அனுப்புவதாகவும் அரசாங்கத்தின் கோரிக்கைகள் மீனவர்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

98 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

36 0 0