ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து. !
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், சென் கிளெயார் நீர்வீழ்ச்சிக்கு அண்மையில் நேற்று (13) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் கடுமையாகக் காயமடைந்துள்ளார்.நேற்று மாலை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், ஒரே திசையில் எதிரெதிராக வந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலில் பலத்த காயமடைந்த ஒரு சாரதி, 1990 சுவசரிய அவசர மருத்துவ சேவையின் ஆம்புலன்ஸ் மூலம் கொட்டகலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்தில் தொடர்புடைய இரு முச்சக்கர வண்டிகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
