திருமணமான இளைஞனின் மோசமான செயல் – பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி.!
மொனராகல மாவட்டத்தின் புத்தல பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் சீண்டல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் திருமணமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தல ரஜ மாவத்தையைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்திற்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.புத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வசந்த பண்டாரவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.