உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

போதை வர்த்தகர்களுக்கு பிணை மறுக்கும் புதிய சட்டம் விரைவில் – சுனில் வட்டகல.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்க அரசு கவனம் செலுத்தி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதாக கூறினார்.இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவது தொடர்பாக எழும் சிக்கல்களை கருத்தில் கொண்டு, வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அவர்களை தடுப்பில் வைக்க முடியுமா என்பது குறித்து சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.


அதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நச்சுப் பொருள் சட்டத் திருத்தத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் கூடுதல் திருத்தம் ஒன்றை கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், குற்றச்செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளதாகவும், அதற்கமைய பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

97 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

36 0 0