உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சமிந்த குமார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

வஸ்கடுவ பகுதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் இன்று (13) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவர், 2008ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் திகதி வஸ்கடுவ பகுதியில் நடைபெற்ற மரணச்சடங்கு ஒன்றின் போது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்.


இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் துறையால் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


வழக்கின் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வாதங்கள் பல தவணைகளில் முன்வைக்கப்பட்ட நிலையில், அதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், மேல் நீதிமன்ற நீதிபதியினால் நீதிமன்ற மண்டபத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டதுடன், மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. பின்னர் நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நிற்குமாறு பணிக்கப்பட்ட நிலையில் மரண தண்டனைத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

97 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

36 0 0