உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஊர்காவற்றுறை சுற்றுலாவிற்கு ஒரு முக்கிய மைல்கல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

ஊர்காவற்றுறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க உருண்டி கோட்டை (Urundy Fort) மற்றும் கடவுக்கரை (Kayts Jetty) பகுதிகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சி சாதகமாகி உள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வடக்கு மாகாண சுற்றுலாத் துறையினர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபையினர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் விளைவாக, அப்பகுதிகளில் நிலவும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள்
புதிய ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள் பயணிகளின் வசதிக்காக ஊர்காவற்றுறை கடவுக்கரை (Jetty) பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் மற்றும் சுத்தமான கழிவறைகள் உடனடியாக அமைக்கப்படவுள்ளன.

சுற்றுலா மேம்பாடு
உருண்டி கோட்டை பகுதியை மையமாகக் கொண்டு சுற்றுலா நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

உடனடி நடவடிக்கை
இப்பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தமது முழுமையான ஒத்துழைப்பையும் சம்மதத்தையும் வழங்கியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

97 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0