உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அரசியல் தோல்வியால் எதிர்க்கட்சியினர் கதறல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எமது அரசு மீது முன்வைத்த விமர்சனங்கள் யாவும், அரசியல் ரீதியாகப் பலமிழந்துள்ள ஒரு தரப்பின் விரக்தியான வெளிப்பாடுகளே என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறினாலும், நடைமுறையில் எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே சட்டம் பாய்கின்றது. அரச தரப்பினரின் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதிமன்றத் தீர்ப்புகளை நாம் கௌரவிக்கின்றோம். அமரகீர்த்தி அத்துகோரலவின் வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதை வரவேற்கும் அதேவேளை, ‘எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே சட்டம் பாய்கின்றது’ என்ற குற்றச்சாட்டை முற்றாக மறுக்கின்றோம்.

கடந்த காலங்களில் மூடிமறைக்கப்பட்ட ஊழல் கோப்புகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படுவதால் ஏற்பட்ட அச்சமே இத்தகைய கருத்துக்களுக்குக் காரணம். சட்டம் அதன் கடமையைச் செய்கின்றது, அதில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை.

முன்னாள் ஆட்சியாளர்கள் தேவையற்ற ஆடம்பரங்களுக்காகவும், தனிப்பட்ட பயணங்களுக்காகவும் மக்கள் பணத்தைச் செலவிட்டு ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தினர். ஆனால், தற்போதைய அரசு மிகவும் இக்கட்டான பாதுகாப்புச் சூழல்களிலும், நாட்டின் மிக முக்கியமான பணிகளுக்காகவும் மட்டுமே அத்தியாவசியத் தேவையின் அடிப்படையில் அரச வசதிகளைப் பயன்படுத்துகின்றது. இதில் எவ்விதமான வீண்விரயமும் இல்லை.

சுதந்திர தினத்தை ஆடம்பரமாகக் கொண்டாடி மக்கள் பணத்தை வீணடிப்பதை விட, அதன் அர்த்தத்தை உணர்ந்து எளிமையாக நடத்துவதையே இந்த அரசு விரும்பியது. ரணவிருவர்களின் கௌரவத்தைச் சிதைப்பதாகக் கூறுவது வேடிக்கையானது. நாட்டின் உண்மையான மாவீரர்களுக்கான மரியாதையை இந்த அரசு எப்போதும் வழங்கும். அவர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் காலம் மலையேறிவிட்டது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

97 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0