உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
54 பார்வைகள்

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 13) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி பெரும்பான்மையைப் பெறுவதை முன்கூட்டியே தெளிவாக கணிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார். அவர் கூறியதாவது:”பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியக் கட்சியை தீர்க்கமான வெற்றிக்கு இட்டுச் சென்ற திரு. தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றி, பங்களாதேஷ் மக்கள் உங்கள் தலைமையில் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஜனநாயக, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பங்களாதேஷுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும். நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”இந்த வாழ்த்துச் செய்தியுடன், இந்தியா–பங்களாதேஷ் உறவுகள் மேலும் வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0