உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வாகனத்தின் சக்கரத்தை சுடாமல் உயிரைப் பறிப்பதா? – அல்லைப்பிட்டி மரணத்துக்கு பொலிஸாரே முழுக் காரணம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம், பொலிஸாரின் கண்மூடித்தனமான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கையாலேயே நிகழ்ந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

இந்த உயிரிழப்புக்கு பொலிஸாரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

தவறான துப்பாக்கிப் பிரயோகம்
“அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தச் சிறுவன் சந்தேகத்துக்கிடமான வகையில் வாகனத்தைச் செலுத்திச் சென்றிருந்தாலும், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்குப் பொலிஸாருக்கு எந்தவிதமான சட்ட அதிகாரமும் இல்லை.

ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவை பொலிஸாருக்கு ஏற்பட்டிருப்பின், அவர்கள் வாகனத்தின் சக்கரங்களை நோக்கி மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, ஒரு உயிரைப் பறிக்கும் வகையில் செயற்பட்டது கண்டிக்கத்தக்கது.

சட்ட நடவடிக்கை தேவை
“இந்தத் துயரமான மரணம் குறித்து முழுமையான மற்றும் நடுநிலையான விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரு சிறுவனின் மரணத்துக்குக் காரணமான பொலிஸார் எவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.” – என்று அந்த அறிக்கையில் சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

97 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0