உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாடாளுமன்றத்தின் கௌரவத்தைக் காக்க சபாநாயகர் உடனடியாக பதவி விலக வேண்டும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின், அவர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் எனப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கை அரசியல் வரலாற்றில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றிய சபாநாயகர்கள் பலர் இருந்துள்ளனர். ஆனால், தற்போதைய சபாநாயகர் மிகவும் மோசமான முறையில் ஆளுங்கட்சிக்குச் சார்பாகச் செயற்பட்டு வருகின்றார். நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவர் ஒருதலைப்பட்சமாகவே நடந்துகொள்கின்றார்.

சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் ஒருவரே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இது பாரதூரமான விடயமாகும். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசமைப்புப் பேரவையின் ஊடாகவே நியமிக்கப்படுகின்றனர். அந்தப் பேரவையின் தலைவராகச் சபாநாயகரே பதவி வகிக்கின்றார்.

தன்னால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆணைக்குழு, சபாநாயகருக்கு எதிராகச் சுயாதீனமான விசாரணையை முன்னெடுப்பது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

எனவே, ‘சட்டம் அனைவருக்கும் சமம்’ என்பது உண்மையானால், இந்த விசாரணைக்கு இடமளிக்கும் வகையில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பதவி விலக வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

97 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0