உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கியூபா எரிபொருள் நெருக்கடி: கனடா பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
55 பார்வைகள்

கியூபாவில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை முன்னிட்டு, அந்நாட்டிற்கு செல்லும் பயணிகள் குறித்து கனடா அரசு அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், கியூபாவிற்கு அவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தற்போது கியூபாவில் தங்கியிருக்கும் கனடியர்கள், வர்த்தக விமான சேவைகள் இயங்கிக் கொண்டிருக்கும் வரை தாமதமின்றி தாயகம் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.கியூபாவின் பல விமான நிலையங்களில் விமான எரிபொருள் விநியோகம் நிலைத்தன்மையற்ற நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.


இதனைத் தொடர்ந்து, முக்கிய கனடிய விமான நிறுவனங்கள் கியூபாவிற்கான தங்களது வர்த்தக விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன.கியூபாவில் உள்ள கனடியர்களை பெப்ரவரி 17ஆம் திகதிக்குள் பாதுகாப்பாக நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.மேலும், திட்டமிடப்பட்ட சில விமானங்கள் மாற்றப்பட்டோ அல்லது ரத்து செய்யப்பட்டோ டொராண்டோ வழியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கனடியர்களை பாதுகாப்பாக மீள அழைத்துவர அரசு மற்றும் விமான நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அந்நாட்டில் தங்கியிருக்கும் அனைவரும் சாத்தியமான வர்த்தக விமான சேவைகள் கிடைக்கும் வரை உடனடியாக நாடு திரும்புமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0