உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

துருக்கி நாடாளுமன்றத்தில் கைகலப்பு!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
41 பார்வைகள்

துருக்கி நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், கைகலப்பாக மாறி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமைச்சரவை மாற்றத்தின் போது சர்ச்சைக்குரிய ஒருவரை நீதி அமைச்சராக நியமித்ததே மோதலுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகன், இஸ்தான்புல் தலைமை அரச சட்டத்தரணியான அகின் குர்லெக்கை புதிய நீதி அமைச்சராக நியமித்திருந்தார்.

இந்நிலையில் குர்லெக் நாடாளுமன்றத்தில் பதவியேற்பதைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்பட்ட போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் ச காணொளி வெளியாகியுள்ளது.

புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அகின் குர்லெக், அரச சட்டத்தரணியாக இருந்தபோது பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பல வழக்குகளை முன்னெடுத்தவர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட எர்டோகனின் முக்கிய அரசியல் எதிரியாகக் கருதப்படும் இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கைது நடவடிக்கைகளுக்கு பின்னால் இவர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நீதி அமைச்சருடன் சேர்த்து, எர்சுரம் மாகாண ஆளுநர் முஸ்தபா சிஃப்ட்சி புதிய உள்நாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.பதவி விலகிய அமைச்சர்கள் தாமாகவே முன்வந்து பதவியிலிருந்து விலகியதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், இந்த அதிரடி மாற்றத்திற்கான உத்தியோகபூர்வ காரணங்கள் வெளியிடப்படவில்லை.

அதேவேளை துருக்கியில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடனான அமைதி முன்னெடுப்புகள் குறித்த விவாதங்கள் இடம்பெற்று வரும் சூழலில் அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0