உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நண்டால் பறிபோன டிக்டொக் பிரபலத்தின் உயிர்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
45 பார்வைகள்

சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான காணொளிகளைப் பதிவிடும் 51 வயதான பிலிப்பைன்ஸ் பெண்மணி ஒருவர், விஷத்தன்மை கொண்ட நண்டை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்

கடந்த 4 ஆம் திகதி, எம்மா அமித் (Emma Amit) என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து சதுப்புநிலக் காட்டில் கடல் உணவுகளைச் சேகரித்துள்ளார்.தான் பிடித்த நண்டுகளை தேங்காய்ப் பாலில் சமைத்து உண்பதை அவர் தனது டிக்டொக் மற்றும் பேஸ்புக் பக்கங்களுக்காகப் படம் பிடித்துள்ளார்.

உணவு உட்கொண்ட அடுத்த நாள், நண்டிலுள்ள நச்சுத்தன்மை காரணமாக அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.வலிப்பு மற்றும் உதடுகள் நீல நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகளுடன் அவர் மயக்கமடைந்ததை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவரது வீட்டுக் குப்பையில் பிரகாசமான நிறம் கொண்ட நண்டுகளின் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் வசிக்கும் மக்களை இத்தகைய நண்டுகளை உண்ண வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0