உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பலப்பரீட்சை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இப்போதே தயாராகி வருகின்றது என்று அக்கட்சியின் உப தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய நிலையில் அவசரமாக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

மாறாக, முதலில் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்துவதே தமது முதன்மை இலக்கு எனவும், அதற்கான விசேட வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

“அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சமரை மிகவும் வலுவான முறையில் எதிர்கொள்வதற்குக் கட்சி தயாராகி வருகின்றது. நாம் நிச்சயம் அந்தச் சமரை எதிர்கொள்வோம்.” – என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கட்சியில் ஏற்பட்ட உட்பூசல்கள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒரு பலமான சக்தியாக மாற்றும் முயற்சியில் அதன் தலைமைகள் ஈடுபட்டுள்ளமையை விஜயதாஸவின் இந்தக் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

96 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

86 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0