உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரான்சில் கடும் புயல் தாக்கம் – நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
43 பார்வைகள்

பிரான்சின் தென் மாவட்டங்களை கடும் புயல் தாக்கி வருகிறது. இதையடுத்து இன்று நான்கு மாவட்டங்களுக்கு அதிகபட்சமான ‘சிவப்பு’ எச்சரிக்கையும், 32 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.சற்று முன் கிடைத்த தகவலின்படி, Landes நகரில் கனரக வாகனம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


தொடர்ச்சியான கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்று காரணமாக Gironde மற்றும் Lot-et-Garonne மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த சூறாவளி காரணமாக Aude மாவட்டத்துக்கும், பனிச்சரிவு அபாயம் காரணமாக Savoie மாவட்டத்துக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புயலின் தாக்கத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு, சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக மின் விநியோக நிறுவனம் Enedis தெரிவித்துள்ளது. இதில் Nouvelle-Aquitaine பகுதியில் 4 இலட்சத்து 85 ஆயிரம் வீடுகளும், Occitanie பகுதியில் 3 இலட்சத்து 18 ஆயிரம் வீடுகளும் அடங்குகின்றன.Aude மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பூங்காக்கள், பொதுத் தோட்டங்கள் மற்றும் கல்லறைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.அவசர சேவைப் பிரிவுகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0