உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
44 பார்வைகள்

பங்களாதேஷின் 13ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (12) காலை ஆரம்பமாகி மாலை 4.30 மணியுடன் அமைதியாக நிறைவடைந்தது.முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவடைந்ததையடுத்து, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பின்னர் இத்தேர்தல் நடைபெற்றுள்ளது.தேர்தலை வன்முறை இன்றி நடத்துவதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 10 இலட்சம் பாதுகாப்புப் படையினர் நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். போராட்டங்களை அடக்க வன்முறையைப் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக அவரது அவாமி லீக் கட்சிக்கு இத்தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனால், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பி.என்.பி) மற்றும் அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமி ஆகியவற்றுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது.பாராளுமன்றத்தின் 300 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஒரு வேட்பாளரின் மறைவால் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், 299 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கினர்.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 42,659 வாக்குச்சாவடிகளில் 24,000 இடங்கள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 90 சதவீத வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு காமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.மேலும், 45 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகள் தேர்தல் செயல்முறைகளை கண்காணித்தனர்.இதனுடன், 84 அம்சங்களை உள்ளடக்கிய ‘ஜூலை தேசிய சாசனம் 2025’ தொடர்பான மக்கள் வாக்கெடுப்பும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0