உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள அதிகரிப்பு; பாற்சோறு சமைத்து கொண்டாட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்டத் மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் ஊடாக மாத்திரம் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய 1750 ரூபாய் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்.

1750ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி கூறும் நிகழ்வு இன்று (12) மாலை கிளரண்டன் கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றது.

இதன்போது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்கிய நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் நானுஓயா கிளரண்டன் கீழ் பிரிவு தோட்டத்தில் பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியினை வெளியிட்டதோடு நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

இதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களாகிய நாங்கள் ஒவ்வொரு முறையும் சம்பள அதிகரிப்பினை பெறுகின்ற போது வீதிக்கு இறங்கி பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து பெற்றுக்கொடுக்க முடியாத அரசாங்கமே இதுவரை காலமும் காணப்பட்டது.

இலங்கை நாட்டின் வரலாற்றில் இதுவரை காலமும் எட்டு ஜானாதிபதிகள் இருந்த காலப்பகுதியிலும் எங்களுடைய சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கவில்லை ஆனால் 09 ஆவது ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க வந்தவுடனே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1750 ரூபாய் சம்பளத்திற்கு பெற்று கொடுத்துள்ளார் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

96 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

86 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0