போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது.!
பிலியந்தலை பொது பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் உள்ளிட்ட 7 பேர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சோதனையில் சுமார் 170 பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் உள்ளிட்ட 7 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.