உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எல்லைமீறும் ரஷ்யாவின் தாக்குதல் ; தந்தையுடன் பலியான மூன்று குழந்தைகள்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
43 பார்வைகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில், 3 குழந்தைகள் மற்றும் அவர்களது தந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர்.மேலும், நிறைமாத கர்ப்பிணியான அவர்களது தாய் படுகாயமடைந்துள்ளார்.உக்ரைனின் கார்கிவ் பகுதியின் மீது ரஷ்யா நேற்று(11) நள்ளிரவு ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளின் மீதான இந்தத் தாக்குதலில் ஒரு குடும்பத்தின் வீடு தகர்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், 34 வயதான நபர் ஒருவர் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தைகள் இருவர், 1 வயது பெண் குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், 8 மாதங்கள் கர்ப்பிணியான அந்தக் குழந்தைகளின் தாய் படுகாயமடைந்துள்ளார்.இந்த நிலையில், மூளையில் கடுமையான காயங்கள் மற்றும் உடலில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்ய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மட்டும் 129 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் உக்ரைனில் 2,514 மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0